பிறப்புரிமையை நீக்குவது தொடர்பாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் விடுத்த உத்தரவை அமெரிக்க நீதிபதி ஜோன் கோகெனோர்(John Coughenour) தற்காலிகமாக தடுத்துள்ளார்.
குறித்த உத்தரவு அரசியலமைப்பிற்கு எதிரானது என கோகெனோர் தெரிவித்துள்ளார்.
ட்ரம்ப்பின் பிறப்புரிமை நீக்கம் தொடர்பான உத்தரவுக்கு எதிராக அமெரிக்காவில் உள்ள 20இற்கும் மேற்பட்ட குழுக்கள் வழக்குத் தாக்கல் செய்திருந்தன.
அவசரத் தடை
இதனையடுத்து, வழக்கை விசாரித்த நீதிபதி ஜோன் கோகெனோர் பிறப்புரிமை நீக்கத்திற்கு எதிரான அவசரத் தடை உத்தரவை பிறப்பித்துள்ளார்.
குறித்த பிறப்புரிமை நீக்கச் சட்டத்தை பெப்ரவரி மாதம் முதல் நடைமுறைக்கு கொண்டு வர ட்ரம்ப் தீர்மானித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.