முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

செம்மணி புதைகுழி சர்வதேச விசாரணைக்கு இந்தியா அழுத்தம்! காங்கிரஸ் தரப்பு கோரிக்கை

செம்மணி மனித புதைகுழி குறித்து சுயாதீன சர்வதேச காணிப்புடனான விசாரணைக்கு இந்தியா பரப்புரைசெய்யவேண்டும் என இந்திய நாடாளுமன்ற உறுப்பினர் சசிகாந்த் செந்தில் (Sasikanth Senthil) வேண்டு கோள் விடுத்துள்ளார்.

செம்மணி மனித புதைகுழி குறித்து இந்திய நாடாளுமன்றத்தில் உரையாற்றுவதற்கு அனுமதி கோரி நாடாளுமன்றத்தின் கீழ்சபையின் செயலாளர் நாயகத்திற்கு எழுதி யுள்ள கடிதத்தில் அவர் இந்த வேண்டு கோளை விடுத்துள்ளார்.

அவர் அதில் தெரிவித்துள்ளதாவது,“ஆறாம் திகதி இந்திய நாடாளு மன்றத்தில் இந்த விவகாரம் குறித்து உரையாற்றுவதற்கான அனுமதியை நான் கோருகின்றேன். எனக்கு அனுமதியளிக்கப்பட்டால் பின்வரும் விடயங்கள் குறித்து நான் குறிப்பிடுவேன்.

மனித புதைகுழிகள்

இலங்கையின் வடபகுதியில் யாழ்ப்பாணத்தில் உள்ள செம்மணியில் சமீபத்தில் மனித புதைகுழிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளமை குறித்த தமிழ்நாட்டின் வேதனையை தெரிவிப்பதற்காக நான் இங்கு உரையாற்றுகின்றேன்.

செம்மணி புதைகுழி சர்வதேச விசாரணைக்கு இந்தியா அழுத்தம்! காங்கிரஸ் தரப்பு கோரிக்கை | Justice For Chemmani International Probe Demanded

மீட்கப்பட்ட மனித எச்சங்கள், இலங்கையின் தமிழ் சமூகத்தின் நீண்டகாயங்களை மீண்டும் கிளறியுள்ளன. இவற்றில் சில மோதல்களின் போது பலவந்தமாக காணாமலாக்கப்பட்டவர்களின் மனித எச்சங்கள் என்று கருதப்படுகின்றது.

பல தசாப்தங்களாக இலங்கைத் தமிழர்கள் திட்டமிடப்பட்ட வன்முறைகள், பலவந்தமாக காணாமலாக்கப்படுதல் போன்றவற்றை எதிர்கொண்டுள்ளனர். 

அவர்களிற்கு நீதி மறுக்கப்பட்டுள்ளது. மனித புதைகுழி என்பது வெறுமனே ஒரு தடயவியல் இடம்மாத்திரமில்லை. இது மறைக்கப்பட்ட உண்மை தாமதிக்கப்பட்ட நீதிக் கான ஒரு குறியீடு.

மறுக்கப்பட்ட நீதி

ஈழத்தமிழர்களுடன் கலாச்சார, மொழி உறவுகளை பகிர்ந்துகொண்டுள்ள தமிழகமக்கள் தொடர்ந்தும் அலட்சியமாக இருக்க முடியாது.

செம்மணி புதைகுழி சர்வதேச விசாரணைக்கு இந்தியா அழுத்தம்! காங்கிரஸ் தரப்பு கோரிக்கை | Justice For Chemmani International Probe Demanded

இந்திய அரசாங்கம் உடனடியாக இந்த விடயத்தை இராஜதந்திர வட்டாரங்கள் ஊடாக அணுக வேண்டும். இந்த விடயத்தில் இலங்கை அரசாங்கத்திடமிருந்து முழுமையான வெளிப்படை தன்மையை கோர வேண்டும்.

செம்மணி மனித புதைகுழி குறித்து சுயாதீன சர்வதேச கண் இந்தியா பரப்புரைசெய்யவேண்டும் மோதல்ககாணிப்புடனான விசாரணைக்கு நீதி நல்லிணக்கம் தமிழ் மக்களின் அரசியல் உரிமைகளிற்கான தனது நீண்டகால நிலைப்பாட்டை இந்தியா மீள வலியுறுத்தவேண்டும்.

இந்தியா வெறுமனே பிராந்திய ஒத்துழைப்பு குறித்து மாத்திரம் குரல்கொடுக்க முடியாது. எல்லைகளிற்கு அப்பால் தமிழ் மக்களின் கௌரவம் உண்மை நீதிக்காகவும் குரல் கொடுக்கவேண்டும். என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நல்லூர் கந்தசுவாமி கோவில் 11 ஆம் நாள் திருவிழா

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.