விஜய் டிவியின் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் முல்லை ரோலில் நடித்தவர் காவ்யா அறிவுமணி. அவர் நடிகை விஜே சித்ராவின் மரணத்திற்கு பிறகு அந்த ரோலில் நடிக்க தொடங்கினார்.
காவ்யாவுக்கு ஆரம்பத்தில் விமர்சனங்கள் வந்தாலும் சில காலத்தில் அவரை ரசிகர்கள் ஏற்றுக்கொண்டனர். அந்த சீரியல் மூலமாக அதிகம் பிரபலமான அவர் சீரியலில் இருந்து திடீரென விலகிவிட்டார்.
அதன் பிறகு அவர் எந்த சீரியல்களிலும் நடிக்கவில்லை. இப்படி திடீரென சின்னத்திரையை விட்டே விலகியது ஏன் என நடிகை தற்போது பேட்டி கொடுத்து இருக்கிறார்.
விலகியது ஏன்
நான் சாதாரண மிடில் கிளாஸ் குடும்பத்தில் இருந்து வந்தவள். சின்ன வயதில் இருந்தே நடிப்பின் மீது அதிகம் ஆர்வம் இருந்தது. தனியாளாக சென்னைக்கு வந்து நடிக்க வாய்ப்பு தேடினேன். இரண்டு வருடங்களுக்கு பிறகு youtubeல் சின்ன சின்ன ரோல்கள், குறும்படங்கள் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அதன் பிறகு பாரதி கண்ணம்மா சீரியல் வாய்ப்பு கிடைத்தது. அதன் பின் பாண்டியன் ஸ்டோர்ஸில் நடித்தேன்.
சின்னத்திரையில் இருக்கும்போதே படங்களில் நடிக்க வாய்ப்பு வந்தது. ஆனால் சீரியல் ஷூட்டிங் இருப்பதால் படங்கள் ஒப்புக்கொள்ள முடியாது. அதனால் படங்களுக்குள் செல்லவேண்டும் என்றால் சீரியலை விட வேண்டும் என்பது தான் ஒரே வழி என முடிவெடுத்தேன். இல்லை என்றால் அந்த கட்டத்திற்குள்ளேயே மாட்டிக்கொள்வேன்.
சீரியல் வேண்டாம் என விலகி தற்போது கவின் – நயன்தாரா நடிக்கும் படத்தில் நடித்து வருகிறேன் என காவ்யா தெரிவித்து இருக்கிறார்.