2004ஆம் ஆண்டில் மட்டக்களப்பு சின்னலெவ்வை வீதியில் வைத்து முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் கருணா அணியினரால் இலக்கு வைக்கப்பட்டார்.
அப்போது சின்னலெவ்வை வீதியை கடந்து தான் ஜோசப் பரராஜசிங்கம் தேவாலயத்திற்கு செல்ல வேண்டியிருந்தது.
எனினும், அப்போது அவர் மீது வைக்கப்பட்ட இலக்கு முறியடிக்கப்பட்டது.
2004ஆம் ஆண்டில் தோல்விடையைந்த ஜோசப் பரராஜசிங்கம் மீதான இலக்கு தான், 2005ஆம் ஆண்டு நத்தார் தினத்தன்று மீண்டும் அவர் மீது வைக்கப்பட்டு அவர் கொல்லப்பட்டார்.
இந்நிலையில், நிலுவையில் இருந்த ஜோசப் பரராஜசிங்கத்தின் கொலை வழக்கை மீண்டும் ஆரம்பிக்க அவரது மகன் ஒப்புதல் அளித்துள்ளார்.
இவை தொடர்பில் விரிவாக ஆராய்கின்றது எமது செய்திகளுக்கு அப்பால் நிகழ்ச்சி,