முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

உயிர் பெறும் தவெக: இன்று உச்ச நீதிமன்ற தீர்ப்பு – அச்சத்தில் தமிழக அரசு

புதிய இணைப்பு

தமிழகம் மட்டுமின்றி மொத்த இந்தியாவும் (India) எதிர்பார்த்திருக்கும் கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பான வழக்கின் தீர்ப்பை இன்று உச்ச நீதிமன்றம் வழங்க உள்ளது. 

கரூரில் தவெக சார்பில் நடத்தப்பட்ட மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் ஏற்பட்ட கடும் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர்.

இந்த விவகாரத்தில் சிபிஐ விசாரணை கோரிய மனு மீது உச்ச நீதிமன்றம் இன்று உத்தரவு பிறப்பிக்க உள்ளது.

முதலாம் இணைப்பு

கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பான வழக்கின் தீர்ப்பை உச்ச நீதிமன்றம் நாளை வழங்க உள்ளது. 

உயிர் பெறும் தவெக: இன்று உச்ச நீதிமன்ற தீர்ப்பு - அச்சத்தில் தமிழக அரசு | Karur Stampede Case Supreme Court Final Judgement

இதேவெளை, தமிழக வெற்றிக் கழக தலைவர் தலைவர் விஜய் எதிர்வரும் 17 ஆம் திகதி கரூர் செல்ல உள்ளதாக  த.வெ.க.வட்டாரங்கள் தெரிவித்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கரூரில் த.வெ.க. தலைவர் விஜய் கடந்த மாதம் (செப்டம்பர்) 27 ஆம் திகதி பிரசாரம் செய்தபோது கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதில் பெண்கள், குழந்தைகள் உட்பட 41 பேர் பலியான சம்பவம் நாட்டையே உலுக்கியது.

உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது

இந்த சூழ்நிலையில் அரசியல் கட்சிகள் நடத்தும் ‘ரோடு ஷோ’வுக்கு வழிகாட்டு நெறிமுறைகள் வகுக்க கோரி சென்னை வில்லிவாக்கத்தைச் சேர்ந்த தினேஷ் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

உயிர் பெறும் தவெக: இன்று உச்ச நீதிமன்ற தீர்ப்பு - அச்சத்தில் தமிழக அரசு | Karur Stampede Case Supreme Court Final Judgement

இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் குறித்து விசாரிக்க வடக்கு மண்டல ஐ.ஜி. அஸ்ரா கர்க் தலைமையில் சிறப்பு புலனாய்வுக்குழுவை நியமித்து உத்தரவிட்டது.

சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக த.வெ.க. தேர்தல் பிரசார மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா சார்பில் தொடரப்பட்ட வழக்கு தொடரப்பட்டது.

சி.பி.ஐ. விசாரணை

இதேபோல் கூட்ட நெரிசலில் சிக்கி பலியான சிறுவன் பிருத்திக்கின் தந்தை பன்னீர்செல்வம், பாத்திமாபானுவின் கணவர் பிரபாகரன், சந்திராவின் கணவர் செல்வராஜ் ஆகியோரும் சம்பவம் குறித்து சி.பி.ஐ. விசாரிக்க கோரி  உச்ச நீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்தனர்.

உயிர் பெறும் தவெக: இன்று உச்ச நீதிமன்ற தீர்ப்பு - அச்சத்தில் தமிழக அரசு | Karur Stampede Case Supreme Court Final Judgement

இதேபோல் சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிடக்கோரி பா.ஜ.க. சட்டத்தரணி ஜி.எஸ்.மணியும் மேல்முறையீடு மனு தாக்கல் செய்துள்ளார். 

இந்த அனைத்து மனுக்களையும் நீதிபதிகள் மகேஸ்வரி, அஞ்சரியா அடங்கிய அமர்வு நேற்று முன்தினம் விசாரித்தது.

உயர் நீதிமன்றம் விசாரித்தது ஏன் 

அப்போது தமிழக அரசு தரப்பிலும், விஜய் தரப்பிலும் காரசார வாதம் நடந்தது.

உயிர் பெறும் தவெக: இன்று உச்ச நீதிமன்ற தீர்ப்பு - அச்சத்தில் தமிழக அரசு | Karur Stampede Case Supreme Court Final Judgement

தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்யின் கரூர் கூட்ட நெரிசல் தொடர்பான வழக்கு உயர் நீதிமன்ற மதுரைக்கிளை அமர்வுக்குள் வரும் நிலையில் இந்த வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் விசாரித்தது ஏன் என்று உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பி இருந்தது

இரு தரப்பு வாதங்களையும் கேட்டறிந்து தீர்ப்பை

திகதி குறிப்பிடாமல் நீதிபதிகள் தள்ளிவைத்தனர்.

இதற்கிடையே இந்த விவகாரம் தொடர்பான தீர்ப்பை உச்ச நீதிமன்றம் நாளை (திங்கட்கிழமை) வெளியிட உள்ளது.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.