கதிர்காமம் கிரிவெஹெர விகாரையின் விகாராதிபதி வணக்க கொபவக தம்மிந்த தேரர் இன்று (11) காலை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாகியுள்ளார்.
மகிந்தவின் ஆட்சிக்காலம்
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் பதவிக் காலத்தில், கிரிவெஹெர சோரத தேரரால் கட்டப்பட்ட வீடு தொடர்பான தகவல்களைப் பெறுவதற்காக இந்த அழைப்பாணை விடுக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இதற்கிடையில், சம்பவம் தொடர்பாக வாக்குமூலம் அளிக்க ருஹுணு கதிர்காம பஸ்நாயக்க நிலமே திஷான் குணசேகரவும் நேற்று (10) குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாகியிருந்தார்.