கட்டுநாயக்க விமான நிலையத்தில் விமான நிலைய வாடகை வாகன ஓட்டுநர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
டுபாயில் இருந்து இலங்கை வந்த பயணி ஒருவரின் பையில் இருந்து பணத்தை திருடிய குற்றச்சாட்டில் குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த 29 ஆம் திகதி இரவு கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்த பயணி, வீடு செல்வதற்காக கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து குறித்த வாடகை வாகனத்தை பெற்றுள்ளார்.
மடிக்கணினி திருட்டு
எனினும் குறித்த பயணி தனது மடிக்கணினி அடங்கிய பையை வாடகை வாகனத்தில் இருந்து எடுக்க மறந்துவிட்டதாக தெரியவந்துள்ளது.
பின்னர் அது குறித்து ஓட்டுநரிடம் கேட்டபோது, பை அவரது வாகனத்தில் இருப்பதாகவும், அதை கட்டுநாயக்க விமான நிலையத்தில் வந்து பெற்றுக்கொள்ளுமாறும் அவருக்குத் தெரிவிக்கப்பட்டது.
அதற்கமைய, இன்று காலை பையைப் பெற்று ஆய்வு செய்தபோது, அதில் இருந்த 904,400 ரூபாய் பணம் காணாமல் போயுள்ளமை குறித்து அந்த பயணி கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸாரிடம் முறைப்பாடு செய்துள்ளார்.
காதலிக்கு பரிசு
பொலிஸ் அதிகாரிகள் ஓட்டுநரை கண்டுபிடித்து கைது செய்து விசாரணைகளை தொடங்கியுள்ளனர்.
சந்தேக நபர், ஹங்வெல்ல பகுதியில் வசிக்கும் தனது காதலிக்கு பணத்தை கொடுத்ததாக கூறியுள்ளார்.
பின்னர், பொலிஸாரின் அறிவிப்பிற்கமைய, குறித்த நபரின் காதலி பொலிஸ் நிலையத்திற்கு வந்து பணத்தை ஒப்படைக்க நடவடிக்கை எடுத்துள்ளார்.