கட்டுநாயக்க பிரதேசத்தில் வர்த்தகர் ஒருவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டுத் தப்பிச் சென்ற நபரொருவர் அநுராதபுரத்தில் வைத்துக் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த 22ஆம் திகதி கட்டுநாயக்க, ஆண்டி அம்பலம பிரதேசத்தில் வட்டிக்கு பணம் கொடுக்கும் வர்த்தகர் ஒருவரின் வீட்டுக்குள் நுழைந்த இரண்டு மர்ம நபர்கள் வர்த்தகர் மீது துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டுத்தப்பிச் செல்ல முயன்றிருந்தனர்.
மேலதிக விசாரணை
இதன்போது அவர்களில் ஒருவர் பிரதேசவாசிகளால் மடக்கிப் பிடிக்கப்பட்டு, கடுமையாக தாக்கப்பட்ட நிலையில் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தார்.

மற்றவர் தப்பிச் சென்றிருந்த நிலையில் மொபைல் போன் நம்பர் ஊடாக அவரது நடமாட்டங்களை அவதானித்த பொலிஸார் அநுராதபுரம் ராஜாங்கனை பிரதேசத்தில் வைத்து குறித்த சந்தேக நபரைக் கைது செய்துள்ளனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கட்டுநாயக்க பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

