முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவின் விளக்கமறியல் காலம்
எதிர்வரும் 25ம் திகதி வரையில் நீடிக்கப்பட்டுள்ளது.
முன்னாள் அமைச்சர் கெஹலிய உள்ளிட்ட 7 சந்தேகநபர்களுக்கு இவ்வாறு விளக்கமறியல்
நீடிக்கப்பட்டுள்ளது.
சந்தேகநபர்கள் மாளிகாகந்த நீதிமன்றில் நேற்றைய தினம்
முன்னிலைப்படுத்தப்பட்டபோதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
சுகாதார அமைச்சில் இடம்பெற்ற பாரிய மோசடிகள் தொடர்பில் கெஹலிய உள்ளிட்டவர்கள்
கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இவை உள்ளிட்ட மேலும் பல செய்திகளை உள்ளடக்கி வருகின்றது இன்றைய நாளுக்கான செய்திகளின் தொகுப்பு..

