டுபாயில் தலைமறைவாகியுள்ள ஒழுங்கமைக்கப்பட்ட போதைப்பொருள் கடத்தல்காரரான தனுவன் சதுரங்கவின் உதவியாளர் ஐந்து இலட்சம் ரூபாய் பெறுமதியான ஐஸ் போதைப்பொருளுடன் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபரிடம் இருந்து 20 கிராம் போதைப்பொருள், 900 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருள் மற்றும் கடத்தல் மூலம் சம்பாதித்த 300,000 ரூபா பணம் ஆகியவற்றை விசேட அதிரடிப்படையினர் கண்டுபிடித்துள்ளனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேகநபர் கொழும்பு 12, செபஸ்டியன் மாவத்தையில் வசிக்கும் 19 வயதுடையவர் எனவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
சந்தேகநபர் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைப்பு
விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த தகவலின் பிரகாரம் கெசல்வத்த அடுக்குமாடி குடியிருப்புக்கு அருகில் சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டு சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலதிக விசாரணைகளுக்காக சந்தேகநபர் கெசல்வத்த பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.