கிழக்குப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் உபவேந்தரான பேராசிரியர் சிவசுப்பிரமணியம் ரவீந்திரநாத், முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் கண்காணிப்பில் இயங்கிய இரகசிய படைப்பிரிவு ஒன்றினால் கடத்தப்பட்டார் என்று குற்றம் சாட்டப்பட்டு வருகின்றது.
ரவீந்திரநாத்தினுடைய நெருங்கிய நண்பராக இருந்த கலைப்பீடத்தின் பீடாதிபதி கலாநிதி பாலசுகுமாரின் பதவி விலகலுக்காக இவர் கடத்தப்பட்டார்.
கடத்தப்பட்ட அவரிடம், பாலசுகுமார் பதவியில் இருந்து விலகுமாறு நிபந்தனை முன்வைக்கப்பட்ட நிலையில் தனது நண்பனின் நிலையின் பொருட்டு பாலசுகுமார் பதவி விலக முற்பட்டார்.
இருப்பினும், பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அதனை ஏற்க மறுக்கின்றது. இந்நிலையில், பதவி விலகல் கடிதம் கையளிக்கப்பட்ட நிலையில் ரவீந்திரநாத் விடுவிக்கப்பட்டார்.
குறித்த கடத்தலை மேற்கொண்ட இரகசிய படைப்பிரிவு விவகாரத்தில் கடந்த 09ஆம் திகதி முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டார்.
அதேவேளை, பேராசிரியர் சிவசுப்பிரமணியம் ரவீந்திரநாத்தின் கடத்தல் விவகாரத்தில் தொடர்புடைய பெண்ணொருவர் குறித்தும் தகவல்கள் கசிந்துள்ளன.
தொடர்ந்து சர்ச்சையை ஏற்படுத்தி வரும் இவ்விடயம் தொடர்பில் விரிவாக ஆராய்கின்றது செய்திகளுக்கு அப்பால் நிகழ்ச்சி,