முல்லைத்தீவு மாவட்ட கொக்குத் தொடுவாய் மனித புதகுழியில் கண்டுபிடிக்கப்பட்ட
சான்று பொருட்களை அடையாளம் காண உதவுமாறு காணாமல் போனோர் அலுவலகத்தின்
நிறைவேற்றுப் பணிப்பாளர் சட்டத்தரணி தற்பரன் வேண்டுகோள்
விடுத்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், வழக்கு இல: AR/804/23 முல்லைத்தீவு மாவட்டத்தின்
கொக்குத்தொடுவாய் பிரதேசத்தில் உள்ள மனித புதைகுழி குறித்த விசாரணை
முல்லைத்தீவு நீதவான் முன்னிலையில் நடத்தப்பட்டு வருகின்றது.
முதற்கட்ட தொல்பொருள் பகுப்பாய்வுகள் இந்த புதைகுழி 1994-1996 காலகட்டத்தைச்
சேர்ந்ததாக இருக்கலாம் என கூறுகிறது.
காணாமல் போன மற்றும் காணாமல் ஆக்கப்பட்ட ஆட்களைக் கண்டுபிடிப்பதற்கான காணாமல்
போன ஆட்கள் பற்றிய அலுவலகத்தின் பரந்த முயற்சிகளின் ஒரு அங்கமாகும்.
சான்றுபொருட்கள்
2016ஆம் ஆண்டின் 14ஆம் இலக்க காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகம்
(தாபித்தல், நிருவகித்தல் மற்றும் கருமங்களை ஆற்றுதல்) சட்டத்தின் பிரிவு 12
(ஆ) இன் கீழ், OMP அதன் கடப்பாடுகளின்படி, மனிதப் புதைகுழி மீதான விசாரணையைக்
கண்காணித்து வருகிறது.
புதைகுழியில் உள்ள மனித எச்சங்களின் அடையாளம் குறித்து தீர்மானம்
மேற்கொள்வதற்குத் துணைபுரியுமாறு காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகத்திடம்
முல்லைத்தீவு நீதவான் கோரிக்கை விடுத்துள்ளார்.
இலங்கையிலும் வெளிநாட்டிலும் உள்ள பொதுமக்களிடம் இந்த வழக்கு தொடர்பான
முக்கியமான தகவல்கள் இருக்கலாம் என்பதை காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகம்
நம்புகிறது.
புதைகுழி அகழ்வின் போது கண்டுபிடிக்கப்பட்டு அடையாளப்படுத்தப்பட்ட பொருட்கள்
தொடர்பில் பொதுமக்கள் தகவல்களையும் அடையாளங்களையும் உறுதிப்படுத்த கொள்ள
முடியும்.
காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகம் கொக்கு தொடுவாய் மனிதப் புதைகுழி சான்று
பொருட்களை இனம் கானும் குடும்ப உறுப்பினர்கள் அல்லது நெருங்கிய
நண்பர்களிகளிடமிருந்து புதைகுழியில் உள்ள எச்சங்கள் குறித்த சாத்தியமான
அடையாளங்கள், அவற்றின் அம்சங்கள், உடைகள், முந்தைய காலங்கள் ஏற்பட்டிருந்த
காயங்கள் போன்றவற்றை விவரிக்க முடியும்.
இரகசியத்தன்மை
வழங்கும் தகவலின் அடிப்படையில், காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகத்தின்
பயிற்சி பெற்ற அதிகாரிகள், இந்த வழக்கு தொடர்பான முக்கியமான தகவல்களைக் கொண்ட
சாத்தியமான உறவினர்கள், சாத்தியமான சாட்சிகள் தொடர்பில் நேர்காணல்
செய்வார்கள்.
அலுவலக சட்டத்தின் கீழ், இரகசியத்தன்மையை உறுதி செய்வதற்கும் (பிரிவு 12 (இ)
(V)) சாட்சி மற்றும் குடும்ப உறுப்பினர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கும்
(பிரிவு 13(1) (எ) மற்றும் 18) OMP கடமைப்பட்டுள்ளது.
இந்த நேர்காணல்கள் மூலம் உணர்ச்சியைத் தூண்டக்கூடிய சாத்தியக்கூறுகள்
குறித்தும் OMP அறிந்திருக்கிறது. இதனால் உளவியல் ரீதியான சேவைகளும்
வழங்கப்படும்.
இது தொடர்பான தகவல்களை இலக்கம் 40 மூன்றாம் மாடி புத்கமுவ வீதி ராஜகிரிய, இல
54 தர்மாராம வீதி கோட்டை மாத்தறை, துணை அலுவலகம் மாவட்ட செயலகம் முல்லைத்தீவு,
கோட்டை வீதி பழைய மாவட்ட செயலக கட்டிடம் மட்டக்களப்பு, மூன்றாம் மாடி புதிய
கட்டிடம் மாவட்ட செயலகம் யாழ்ப்பாணம், மாவட்ட செயலகம் மன்னர், A9 வீதி
நீதிமன்றம் அருகாமை கிளிநொச்சி
ஆகிய அலுவலகங்களில் 05.08.2025 ஆந் திகதி முதல் 04.09.2025 ஆந் திகதி
வரையில் வருகை தந்து தகவல்களை வழங்கலாம்.
அல்லது ராஜகிரிய 0112861431, மாத்த்றை 0412244684, முல்லைத்தீவு 0212286030, மட்டக்களப்பு 0652222229,
யாழ்ப்பாணம் 0212219400 மற்றும் மன்னார் 0232223929 ஆகிய தொலைபேசி இலக்கங்கள்
மூலம் தகவல்களை வழங்க முடியும் என சட்டத்தரணி தற்பரன் வேண்டுகோள் குறிப்பிட்டுள்ளார்.