கொட்டாஞ்சேனையில் நடந்த துப்பாக்கிசூட்டு சம்பவத்திற்கு உதவியதாகக் கூறப்படும் சந்தேக நபரை அடுத்த மாதம் 6ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
குறித்த உத்தரவானது கொழும்பு நீதவான் நீதிமன்றத்தால் இன்றையதினம்(25) உத்தரவிடப்பட்டுள்ளது.
விளக்கமறியலில்
கொட்டாஞ்சேனை காவல்துறையினரால் தடுத்து வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்ட சந்தேக நபர், இன்று கொழும்பு மேலதிக நீதவான் முன்னிலையில் முன்னிலைப்படுத்தப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கொட்டாஞ்சேனை பகுதியில் கடந்த பெப்ரவரி 21ஆம் திகதி வர்த்தக நிலையமொன்றின் உரிமையாளரான சசிகுமார் சுட்டுக்கொலை செய்யப்பட்டார்.
அவரை சுட்டுக்கொலை செய்த துப்பாக்கிதாரிகளும் பொலிஸாரால் சூட்டுக்கொல்லப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.