கொழும்பு – கொட்டாஞ்சேனை பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் உயிரிழந்தவர் தொடர்பான தகவல்களை பொலிஸார் வெளியிட்டுள்ளனர்.
கொட்டாஞ்சேனையின் 16வது பாதையில் நேற்றிரவு (07) நடந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் ஒருவர் கொல்லப்பட்டார்.
சம்பவத்தில் உயிரிழந்தவர் 43 வயதுடையவர் என்றும் “புகுடு கண்ணா” என்று அழைக்கப்படும் குற்றவியல் கும்பல் உறுப்பினரான பாலச்சந்திரன் புஷ்பராஜின் உதவியாளர் என்பது விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

துப்பாக்கித்தாரி தப்பியோட்டம்
காரில் வந்த ஒரு குழு துப்பாக்கிச்சூடு நடத்திவிட்டு தப்பிச்சென்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த துப்பாக்கிச்சூட்டிற்கு 9 மிமீ துப்பாக்கி பயன்படுத்தப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

