முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

கொட்டாஞ்சேனை துப்பாக்கிச்சூடு: யாழில் கைதானவர்களிடம் மீட்கப்பட்ட வளர்ப்பு நாய்

கொழும்பு – கொட்டாஞ்சேனையில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டுச் சம்பவத்துடன்
தொடர்புடைய குற்றச்சாட்டில், யாழ்ப்பாணத்தில் காருடன் கைது செய்யப்பட்ட பெண்
உள்ளிட்ட மூவரையும் கொழும்பில் இருந்து வந்த விசேட பொலிஸ் குழுவினர் மேலதிக
விசாரணைக்காகக் கொழும்புக்கு அழைத்துச் செல்ல நடவடிக்கை எடுத்துள்ளனர்.

அதேவேளை, காருடன் மூவரும் கைது செய்யப்படும் போது, காரினுள் அவர்களின் ஆடைகள்
எதுவும் இல்லாத நிலையில், சந்தேகநபர்களுக்குச் சொந்தமான வெளிநாட்டு இன
வளர்ப்பு நாய் ஒன்றும் காரினுள் இருந்து மீட்கப்பட்டுள்ளது.

துப்பாக்கிச்சூடு

அதனையும்
கொழும்புக்கு அழைத்து செல்ல பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

கொழும்பு கொட்டாஞ்சேனைப் பகுதியில் நேற்றுமுன்தினம் வெள்ளிக்கிழமை இரவு
வீதியில் நடந்து சென்ற ஒருவர் மீது, பின்னால் நடந்து வந்த நபர் ஒருவர் மிக
அருகில் சென்று துப்பாக்கிச்சூட்டை நடத்தி விட்டு, பின்னர் கார் ஒன்றில் ஏறி,
துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகி விழுந்தவர் மீது காரை ஏற்றித் தப்பிச் சென்று
இருந்தார்.

கொட்டாஞ்சேனை துப்பாக்கிச்சூடு: யாழில் கைதானவர்களிடம் மீட்கப்பட்ட வளர்ப்பு நாய் | Kotehenna Gun Shoot Details

துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்கானவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில்
அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்தார்.

இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் பொருத்தியிருந்த கண்காணிப்புக் கமராக்களில்
பதிவாகி இருந்தன.

இந்நிலையில் சம்பவத்துடன் தொடர்புடைய காரை கொழும்பு ஆமர் வீதியில் கைவிட்டு
விட்டு, பிறிதொரு காரில் துப்பாக்கிதாரி உள்ளிட்ட சந்தேகநபர்கள் யாழ்ப்பாணம்
நோக்கி வந்தனர்.

வளர்ப்பு நாய்

சந்தேகநபர்கள் காரை வாடகைக்குப் பெற்றே யாழ்ப்பாணத்துக்குத் தப்பிச் சென்றதை
அறிந்த பொலிஸார், காரை வாடகைக்குக் கொடுத்த நிறுவனத்தைக் கண்டறிந்து,
அவர்களிடம் இருந்து கார் தொடர்பான தகவல்களைத் பெற்றனர்.

அதன் அடிப்படையில் காரில் பொருத்தப்பட்டிருந்த தடங்காட்டியின் உதவியுடன்
காரைக் கண்காணித்த வேளை கார், யாழ். மானிப்பாய் பகுதியில் நிற்கின்றது எனக்
கிடைத்த தகவலின் அடிப்படையில், யாழ். மாவட்ட குற்றத் தடுப்புப்
பிரிவினருக்குக் கொழும்பைச் சேர்ந்த பொலிஸ் குழு அறிவித்ததை அடுத்து, சம்பவ
இடத்துக்கு விரைந்த குற்றத் தடுப்புப் பிரிவினர், காரை மானிப்பாய் பகுதியில்
உள்ள வாகனத் திருத்தகம் ஒன்றில் கண்டுபிடித்தனர்.

கொட்டாஞ்சேனை துப்பாக்கிச்சூடு: யாழில் கைதானவர்களிடம் மீட்கப்பட்ட வளர்ப்பு நாய் | Kotehenna Gun Shoot Details

அதையடுத்து காரை மீட்ட பொலிஸார் காரில் பயணித்த மூவரையும், வாகனத் திருத்தக
உரிமையாளரையும் கைது செய்ததுடன், அவர்களால் கொழும்பில் இருந்து கொண்டுவரப்பட்ட
அவர்களின் வளர்ப்பு நாயையும் மீட்டு பொலிஸ் நிலையம் கொண்டு சென்றனர்.

வாகன திருத்தக உரிமையாளரிடம் முன்னெடுத்த விசாரணையில் காரில் குளிரூட்டி வேலை
செய்யவில்லை எனவும், அதனைத் திருத்தம் செய்யவே காரைக் கொண்டு வந்தார்கள்
எனவும் தெரிவித்தார்.

[07P39B[

அவரிடம் மேற்கொள்ளப்பட்ட மேலதிக விசாரணைகளின்
அடிப்படையில், காரைத் திருத்தவே சந்தேகநபர்கள் அங்கு போனார்கள் என்பதைப்
பொலிஸார் உறுதிப்படுத்தியதை அடுத்து திருத்தக உரிமையாளரை விடுவித்தனர்.

பொலிஸ் விசேட குழு

அதேவேளை, காரில் பயணித்த நிலையில் கைது செய்யப்பட்ட பெண் உள்ளிட்ட மூவரையும்
தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுத்த வேளை, தாம் யாழ்ப்பாணத்துக்குச்
சுற்றுலா வந்ததாகவே கூறினர்.

காரில் மீட்கப்பட்ட நாய் வளர்ப்பு நாய் எனவும்,
கைது செய்யப்பட்ட பெண் கைது செய்யப்பட்ட ஆண் ஒருவரின் காதலி எனவும் கூறினர்.

கொட்டாஞ்சேனை துப்பாக்கிச்சூடு: யாழில் கைதானவர்களிடம் மீட்கப்பட்ட வளர்ப்பு நாய் | Kotehenna Gun Shoot Details

இந்நிலையில் கொழும்பில் இருந்து நேற்று சனிக்கிழமை நள்ளிரவு யாழ்ப்பாணத்தை
வந்தடைந்த பொலிஸ் விசேட குழு, கைது செய்யப்பட்ட மூவரையும் பொறுப்பெடுத்துக்
கொண்டனர்.

கைது செய்யப்பட்ட மூவரையும் , அவர்கள் பயணித்த கார் மற்றும் அவர்களின்
வளர்ப்பு நாய் என்பவற்றையும் கொழும்புக்குக் கொண்டு செல்ல அவர்கள் நடவடிக்கை
எடுத்துள்ளனர்.

இதேவேளை, கொழும்பில் இடம்பெறும் துப்பாக்கிச்சூட்டுச் சம்பவங்கள் மற்றும்
குற்றச்செயல்களில் ஈடுபடுவோர், யாழ்ப்பாணம் ஊடாக இந்தியாவுக்குத் தப்பிச்
செல்கின்றமை அதிகரித்துள்ள நிலையில், யாழ். கரையோரப் பாதுகாப்பு மற்றும்
கண்காணிப்புக்களைப் பாதுகாப்புத் தரப்பினர் அதிகரித்துள்ளனர்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.