திருகோணமலை – குச்சவெளி பிரதேச சபை தவிசாளர் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
விசாரணை நடவடிக்கைகள்
அவர், 5 இலட்சம் ரூபா பணத்தை இலஞ்சமாக பெற முனைந்தபோது கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

கைது செய்யப்பட்ட இவர், தற்போது திருகோணமலை – நிலாவெளி பொலிஸ் நிலையத்தில்
ஒப்படைக்கப்பட்டு இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில், விசாரணைகள் தொடர்ந்து இடம்பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

