Courtesy: Sivaa Mayuri
இலங்கை கடற்பரப்பில் கடற்றொழிலில் ஈடுபட்ட இந்தியப் படகை கைப்பற்றும் முயற்சியில், இலங்கை கடற்படை உறுப்பினர் ஒருவர் உயிரிழந்தது குறித்து இந்தியாவிடம் தனது கவலையை இலங்கை பதிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன
கடந்த திங்கட்கிழமை (24) இலங்கைக் கடற்பரப்பில் சட்டவிரோதமாக மீன்பிடியில் ஈடுபட்டதாகக் கூறி 10 இந்திய கடற்றொழிலாளர்கள் கைது செய்யப்பட்டனர்.
இதன்போது, அவர்களது இழுவைப் படகை கைப்பற்றும் நடவடிக்கையிலேயே இலங்கையின் கடற்படை உறுப்பினர் உயிரிழந்துள்ளார்.
இந்திய உயர்ஸ்தானிகரக அதிகாரி
இந்த சம்பவத்தை விபரித்த இலங்கை கடற்படை, கடற்படையின் சிறப்புப் படகுப் படைப்பிரிவைச் சேர்ந்த மூத்த உறுப்பினர் ஒருவர், இந்திய இழுவைப்படகின் ஆக்ரோசமான சூழ்ச்சிகளை எதிர்த்ததால், கடுமையான காயங்களுக்கு ஆளாகி உயிரிழந்ததாக தெரிவித்திருந்தது.
இந்தநிலையில், இலங்கை வெளிவிவகார அமைச்சின் தெற்காசிய பணிப்பாளர் நாயகம் நிலுக கதுருகமுவ, இந்திய உயர்ஸ்தானிகரகத்தின் மூன்றாம் நிலை அதிகாரி ஒருவரை அழைத்து, இது தொடர்பில் கவலைகளை வெளிப்படுத்தியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.