நோயாளிகளின் பாதுகாப்பை பாதிக்கும் கடுமையான பிரச்சினைகள் காரணமாக தேசிய
மருந்துகள் ஒழுங்குமுறை ஆணையம் (NMRA) மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு
வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மருத்துவர்கள் மற்றும் குடிமக்கள் உரிமைகள் பாதுகாப்பு சங்கம் இந்த
நடவடிக்கையை எடுத்து வருகிறது.
முறைப்பாடுகள்
Ondansetron ஊசி மருந்து, சில என்டிபயாட்டிக் மருந்துகள் பயன்படுத்தப்பட்டதன்
பின்னர் ஏற்பட்ட மரணங்கள், கடுமையான அலர்ஜி எதிர்வினைகள் மற்றும் கர்ப்பிணி
பெண்ணின் மரணம் ஆகியவை இந்த முறைப்பாடுகளில் இடம்பெற்றுள்ளன.
2024 – 2025 காலத்தில் இந்திய நிறுவனத்திலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட பல
மருந்துகள் தரக்குறைவால் திரும்பப் பெறப்பட்டதாக, மருத்துவர்கள் மற்றும்
குடிமக்கள் உரிமைகள் பாதுகாப்பு சங்க தலைவர் சாமல் சஞ்சீவ தெரிவித்தார்.
திரும்பப் பெறப்பட்ட மருந்து தொகுதிகள்
கடந்த இரண்டு ஆண்டுகளில் 100க்கும் மேற்பட்ட மருந்து தொகுதிகள் திரும்பப்
பெறப்பட்டுள்ளன.
எனவே மருந்து ஒழுங்கு முறைகள் முற்றிலும் தோல்வியடைந்துள்ளதாக அவர் குற்றம்
சாட்டியுள்ளார்.
பொறுப்புடைய அதிகாரிகள் பதவி விலக வேண்டும் என்றும், சம்பந்தப்பட்டவர்களுக்கு
எதிராக விசாரணை நடத்த வேண்டும் என்றும் அவர் கோரியுள்ளார்.

