Courtesy: Sivaa Mayuri
சுமார் 2 கோடி ரூபாய் பெறுமதியான வெளிநாட்டு மதுபான போத்தல்கள் காணாமல் போனமை தொடர்பில் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினரால், புதுக்கடை நீதிமன்ற வளாகத்தின் முன்னாள் பொறுப்பாளர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
நீதிமன்றத்தின் சேமிப்பகத்தில் இருந்து இந்த மதுபானப் போத்தல்கள் காணாமல் போனதாக முறையிடப்பட்டிருந்தது.
நீதவானின் உத்தரவு
இந்நிலையில், கைது செய்யப்பட்டவரை எதிர்வரும் ஜுலை மாதம் 16 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க கொழும்பு பிரதான நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
சட்ட வைத்திய அறிக்கையின் அடிப்படையில், களவாடப்படுவதற்கு முன்னர், களஞ்சிய அறையின் கதவு உரிய சாவியுடன் திறக்கப்பட்டிருந்ததாக, நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ச அண்மையில் நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.