தமிழரசுக் கட்சி தேர்தல் காலத்தில் வாக்குக்காக கசிப்பு வழங்கியதாக சபை முதல்வர் பிமல் ரத்னாயக்க குற்றம் சுமத்தியுள்ளார்.
குறித்த விடயத்தை இன்று (08) நாடாளுமன்றத்தில் உரையாடும் போதே அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் “தமிழரசுக் கட்சி வாக்குகளை பெறுவதற்காக கசிப்பு வழங்கினார்கள்.
தேர்தலில் வெற்றி
அத்துடன், மக்களுக்கு பணத்தையும் வழங்கி தேர்தலில் வெற்றி பெறுவதற்காக இனவாத கருத்துக்களை பயன்படுத்தினர்.
அவை கூறுவதற்கு தகுந்த வார்தைகள் அல்ல என்ற காரணத்தினால் நான் அவற்றை இங்கு சுட்டிக்காட்ட விரும்பவில்லை.

நாங்கள் நினைத்திருந்தால் எங்களாலும் பணத்தை வழங்கியிருக்க முடியும் ஆனால், நாங்கள் அதனை செய்யவில்லை.
எனினும், தூய்மையான அரசியலை செய்து நாங்கள் வவுனியாவிலும் மன்னாரிலும் வெற்றி பெற்றுள்ளோம்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

