கொழும்பு – 10 மாளிகாவத்தை லக்கிரு செவன தொடர் மாடியில் பட்டப் பகலில் பாரியளவில் ஹெரோயின் விற்பனை நடைபெறுவதாக தகவல்களில் தெரியவந்துள்ளது.
மாளிகாவத்தை லக்கிரு செவன தொடர்மாடியில் வசிக்கும் ஒரு பெண்ணே இந்த பாரிய போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபடுகின்றார்.
பட்டப் பகலில் விற்பனை
காலை-பகல்-மாலை நேரங்களில் இது நடைபெறுகிறது. போதைப்பொருள் விற்பனை செய்யும் போது பெண்களும் முண்டியடுத்துக் கொண்டு வாங்குவதாக தெரியவருகிறது.
ஹெரோயின் போதைப்பொருளை வழங்குவதற்கு முன்னர் பணம் சேகரிக்கும் செயற்பாடுகளில் பலர் ஈடுபடுகின்றனர்.

அவர்கள் வந்து பணத்தை பெற்றுக்கொள்ளும் போது, இதை இந்த செற்பாடுகளின் முக்கிய நபரான பெண் அவதானித்த வண்ணம் இருப்பார்.
விற்பனையில் ஈடுபடும் பெண்
பின்னர் அவர் முச்சக்கர வண்டியில் போதைப்பொருளுடன் ஒளிந்திருப்பார். பணம் பெற்றுக் கொண்ட பெண்ணின் ஆட்கள் முச்சக்கர வண்டியில் அமர்ந்திருக்கும் பெண்ணிடம் பணத்தை கொடுத்த பின்னர் அந்த பெண் முச்சக்கரவண்டியில் இருந்தவாறு போதைப்பொருட்களை கீழே போட்டு விட்டு எவ்வித பயமுமின்று அங்கிருந்து செல்வார்.

இந்த பாரிய பயங்கர நிகழ்வுகள், கொழும்பு -10 மாளிகாவத்தை லக்கிரு செவன தொடர்மாடியில் B-ப்ளொக் மற்றும் C-ப்ளொக் பகுதியில் நடைபெறுவதாக தெரியவருகின்றது.

