விஸ்வமடு பகுதியில் இருந்து கப்ரக வாகனத்தில் காட்டுத் தடிகளை அனுமதியின்றி
வெட்டி வேறு பகுதிக்கு கொண்டு செல்ல முற்பட்ட நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த சாரதி தர்மபுரம் பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற
தகவலுக்கு அமைவாக வீதி சோதனையின் மூலம் கைது
செய்யப்பட்டுள்ளார்.
மேலதிக விசாரணை
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் நேற்றைய தினம் (21.06.2025) கிளிநொச்சி நீதிமன்றம் முட்படுத்தப்பட்ட பொழுது தமது குற்றத்தினை
ஒப்புக்கொண்ட நிலையில் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் தொடர்பாக
தருமபுரம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

