கல்முனையில் (Kalmunai) விடுதி அறை ஒன்றின் மலசல கூடத்தில் மீட்கப்பட்ட ஆணின் சடலம்
தொடர்பாக மேலதிக விசாரணைகளை பொலிஸார்
மேற்கொண்டுள்ளனர்.
கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலைக்கு முன்பாக உள்ள விடுதி அறை மலசல
கூடத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் குறித்த சடலம் நேற்று (23) மீட்கப்பட்டிருந்தது.
மேலதிக விசாரணை
இந்நிலையில் சடலமாக மீட்கப்பட்டவர்
அப்பகுதியில் உள்ள உணவகம் ஒன்றில் பணியாற்றி வந்த பெரிய நீலாவணை 02
செல்லத்துரை வீதி பகுதியை சேர்ந்த 2 பெண் பிள்ளைகளின் தந்தையான 54 வயது
மதிக்கத்தக்க பூசாரி சந்திரன் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
உயிரிழந்தவரின் சடலம் கல்முனை ஆதார வைத்தியசாலைக்கு பிரேத பரிசோதனைக்காக
எடுத்துச் செல்லப்பட்டு, சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண
விசாரணை அதிகாரி அப்துல் ஹமீட் அல் ஜவாஹீர் மேற்கொண்டார்.
இதன்போது தற்கொலை செய்தமைக்கான அடையாளம்
தென்பட்டுள்ளதாகவும் கழுத்து எழும்பு முறிவடைந்து மரணம் சம்பவித்துள்ளதாக மரண
விசாரணை அறிக்கையிடப்பட்டு உறவினர்களிடம் சடலம் கையளிக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்த மரணம் குடும்ப பிரச்சினை காரணமாக
இடம்பெற்றதா அல்லது வேறு ஏதாவது விடயத்திற்காக மரணம் சம்பவித்துள்ளதா என
மேலதிக விசாரணைகளை கல்முனை தலைமையக பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.