கட்டுநாயக்க விமான நிலையத்தில் உள்ள Air Cargo Village பகுதிக்குள் அனுமதியின்றி மோட்டார் வாகனத்தில் நுழைந்த ஒருவர் விமானப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட நபர் தம்புத்த, பாலுகம பிரதேசத்தை சேர்ந்தவராகும்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் மேலதிக விசாரணைக்காக கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸாரிடம் கையளிக்கப்பட்டுள்ளார்.
சந்தேக நபர் குடிபோதையில் இருந்ததாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
பொலிஸார் விசாரணை
அனுமதியின்றி மோட்டார் வாகனத்தில் Air Cargo Village பகுதிக்குள் நுழைந்தமைக்கான காரணத்தை கண்டுபிடிக்கும் விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


