முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

மனைவியை கொலை செய்து புதைத்து விட்டு நாடகமாடிய கணவன்: விசாரணையில் பகீர் தகவல்கள்

காலியில் மனைவியை கொலை செய்து வீட்டுக்கு அண்மித்த பகுதியில் புதைத்த கணவன் கைது செய்யப்பட்டுள்ளார்.

42 வயதான மஜுவான கமகே இந்திராணி என்ற பெண்ணே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் ரணசிங்க காமினி என்பவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அடித்துக் கொலை

மனைவியுடன் ஏற்பட்ட வாக்குவாதத்தில், தனது மனைவியை ஒரு கட்டையால் அடித்துக் கொலை செய்து, ஊருபொக்கவில் உள்ள வீட்டிற்கு அருகே கணவர் புதைத்துள்ளார்.

மனைவியை கொலை செய்து புதைத்து விட்டு நாடகமாடிய கணவன்: விசாரணையில் பகீர் தகவல்கள் | Man Killed Wife And Buried

பின்னர் தனது மனைவியைக் காணவில்லை என்று எல்பிட்டிய பொலிஸாரிடம் முறைப்பாடு செய்து நாடகமாடியதாக பொலிஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

கொலை செய்யப்பட்ட பெண்ணின் 18 வயது மகளிடம் நடத்தப்பட்ட விசாரணையில், கொலைச் சம்பவம் குறித்து தகவல்களை பொலிஸ் அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர்.

பின்னர், சம்பவத்தில் தொடர்புடைய சந்தேக நபரான ரணசிங்க காமினி என்பவர் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டார்.

பொலிஸார் விசாரணை

விசாரணையின் போது, ​​சந்தேக நபர் சம்பவத்தை ஒப்புக்கொண்டு அனைத்து விவரங்களையும் வழங்கினார்.

மனைவியை கொலை செய்து புதைத்து விட்டு நாடகமாடிய கணவன்: விசாரணையில் பகீர் தகவல்கள் | Man Killed Wife And Buried

எனது மனைவியை திருமணம் செய்த கிராமத்தில் கூலித் தொழிலாளியாக பணியாற்றி வந்தேன். மனைவிக்கு தகாத உறவுகள் இருந்தன. இது குறித்து நான் அவரை பலமுறை எச்சரித்தேன், ஆனால் அவர் உறவை நிறுத்தவில்லை. இறுதியாக, என்னால் எதுவும் செய்ய முடியாததால், என் மனைவி மற்றும் மகளுடன் தெனியாயவின் ஊருபொக்க பகுதியில் கூலித் தொழிலாளியாக வேலைக்கு சென்றேன். ஆனால் அவர் மீண்டும் தொலைபேசியில் முன்பு உறவு வைத்திருந்தவர்களுடன் ரகசியமாக உறவு வைத்திருப்பதை அறிந்து கொண்டேன். அது குறித்து வினவிய போது ஏற்பட்ட மோதலில் அவரை தாக்கி கொலை செய்து விட்டு உடலை வீட்டிற்கு அருகில் புதைத்தேன். இந்த சம்பவம் 2024ஆம் பெப்ரவரி மாதம் நடந்தது. 4 நாட்களுக்கு பின்னர் மனைவியை காணவில்லை என பொலிஸாரிடம் முறைப்பாடு செய்தேன். தற்போதே பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில் உடலை தோண்டி எடுப்பதற்கு பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.