தலவாக்கலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மேல் கொத்மலை நீர்தேக்கத்திலிருந்து இன்றையதினம்(15) ஆணின் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது.
மதியம் 3 மணியளவில் இந்த சடலம் மீட்கப்பட்டதாக
தலவாக்கலை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பொலிஸார் விசாரணை
சடலமொன்று மிதப்பதைக்கண்ட பிரதேசவாசிகள் தலவாக்கலை பொலிஸருக்கு
அறிவித்த நிலையில், சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார் சடலத்தினை மீட்டுள்ளனர்.
சடலமாக மீட்கப்பட்ட ஆண் நீரில் அடித்துக் கொண்டு வந்து உயிரிழந்தாரா அல்லது நீர்த் தேக்கத்தில் பாய்ந்து உயிரிழந்தாரா என்பது தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
சடலம் இதுவரை அடையாளம் காணப்படவில்லை என்பதுடன், உயிரிழந்தவர் சுமார் 30 தொடக்கம் 40 வயதுக்கிடைப்பட்ட ஆண் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மரண விசாரணைகளின் பின் சடலம் வைத்திய பரிசோதனைக்காக நுவரெலியா மாவட்ட
வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.