மன்னார் (mannar)விடத்தல்தீவை சேர்ந்த அ. அமல்ராஜ் ஆசிரியரிடம் பயிற்சி பெற்ற மன்னார் மடு கல்வி வலய அடம்பன் மத்திய மகாவித்தியாலய 13 வயது மாணவி செல்வி மகேந்திரன் சேருயா கடந்த 04/12/2024 அன்று கொழும்பு (colombo)சுகதாச உள்ளக அரங்கில் நடைபெற்ற (குமித்தே) கராத்தே போட்டியில் கலந்து கொண்டு வெண்கலப்பதக்கத்தினை வென்று மாவட்டத்திற்கும் ஆசிரியருக்கும் பெருமை சேர்த்துள்ளார்.
18 வயது கீழ் பிரிவில் தேசிய கராத்தே போட்டியில் இதுவே மன்னார் மாவட்ட வரலாற்றில் முதல் தடவை என்பதும் மாணவியும் ஆசிரியரும் மாவட்ட ரீதியில் பாராட்டு பெற்று வருகின்றனர்
பதக்கங்களை அள்ளிய வீரர்கள்
அத்துடன் கடந்த 08/12/2024 அன்று கிளிநொச்சி(kilinochchi) உள்ளக விளையாட்டரங்கில் நடைபெற்ற மன்னார் மாவட்ட கராத்தே போட்டியில் 18 மாணவர்கள் போட்டியிட்டனர் இதில் 32 தங்கப்பதக்கம் 09 வெள்ளிப்பதக்கம் 03 வெண்கலப்பதக்கம் என 44 பதக்கங்களை பெற்றிருந்தனர்.
இதில் விடத்தல் தீவு, அடம்பன், நானாட்டான், வங்காலை, மன்னார், கற்கிடந்தகுளம் , முருங்கன் ஆகிய பாடசாலை மாணவர்கள் கலந்து கொண்டதோடு 05 மாணவர்கள் இதில் சம்பியனாக தெரிவு செய்யப்பட்டுள்ளனர்
. அமல்ராஜ் இவோன் மன்/தூய ஜோசவாஸ் மகாவித்தியாலயம்
. p.றஜீபன் சென் ஆன்ஸ் வங்காலை
. N.நிதுனா சென் ஜோசப் விளையாட்டுகழகம் கற்கிடந்தகுளம்
J.ஜெசின் சென் ஜோசப் விளையாட்டு கழகம் . கற்கிடந்தகுளம்
S.முகேஸ் மன்/ சித்திவிநாயகர் இந்துக்கல்லூரி அமல்ராஜ் இவோன் ஸ்ரேயா தொடர்ந்து இரண்டாவது முறையாகவும் மாவட்ட ரீதியில் சம்பியனாக தெரிவு செய்யப்பட்டுள்ளார்
இதில் போட்டியிட்ட 18 வீரர்களும் தேசிய கராத்தே போட்டிக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளனர். என்பதோடு அமல்ராஜ் றொமாரியோ பில் பிராங்கி
குமித்தே(gold 01)
குரும் காட்டா(gold)
தனிக்காட்டா சில்வர் ஆகியன பெற்று பாடசாலைக்கு பெருமை சேர்த்தமை குறிப்பிடத்தக்கது.