முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

காற்றாலை திட்டத்திற்கு குறிவைக்கப்படும் மன்னார் : சதி திட்டம் தீட்டும் இந்தியா

மன்னாரில் முன்னெடுக்கப்பட்டு வரும் காற்றாலை மின் கோபுரம் அமைக்கும் திட்டமானது மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

மக்களின் எதிர்ப்பை மீறி முன்னெடுக்கப்பட்டு வரும் காற்றாலை மின் கோபுரம் அமைக்கும் நடவடிக்கை மற்றும் கனிய மணல் அகழ்வு போன்றவற்றுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் தொடர்ச்சியாக போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

எதற்காக இந்த திட்டத்திற்கு மன்னார் மாவட்டம் மட்டும் தேர்ந்தெடுக்கப்படுகின்றது என்ற கேள்வி மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.

இந்த மின்கோபுரங்கள் மூலமாக மின்சாரத்தை பெற்றுக்கொள்ள வேண்டுமாக இருந்தால் குறைந்தது மணித்தியாலயத்திற்கு 8.5 கிலோமீற்றர் வேகத்தில் காற்று வீசுவது போதுமானது என தெரிவிக்கின்றனர் தொழில்நுட்ப வல்லுநர்கள்.

ஆனால் இலங்கையினுடைய ஒட்டுமொத்த கரையோரங்களிலும் மணித்தியாலயத்திற்கு சுமார் 12.5 கிலோமீற்றர் வேகத்தில் காற்று வீசுகின்ற நிலையில் நாட்டினுடைய எந்தப்பகுதியிலும் இந்த நடைமுறைப்படுத்த முடியும் என்கின்ற நிலையில் மன்னார் மாவட்டம் மட்டும் குறிவைக்கப்படுகின்றது என்ற கேள்வி எழுந்துள்ளது.

இதற்கு பூகோள அரசியல் நிலைமைகள் செல்வாக்குச் செலுத்துகின்றது என்பது சுட்டிக்காட்டத்தக்கது.

சீனாவினுடைய ஆதிக்கம் என்பது இந்து சமுத்திர பிராந்திய ஆதிக்க நிலைமைகளின் அடிப்படையில் இலங்கை சீனாவினுடைய பக்கம் சாய்ந்திருக்கின்ற நிலைமை இன்று எழுதப்படாத ஒரு விதி.

அம்பாந்தோட்டை துறைமுகம் தொடக்கம் புத்தளம் வரையில் சீனாவினுடைய செல்வாக்கு அதிகமாக இருக்கும் நிலையில் இந்தியாவிற்கு ஒரு நிலைப்பாடு இருக்கின்றது.

அண்டை நாடான இலங்கையில் சீனா முழுமையாக காலூன்றுமாக இருந்தால் இந்தியாவினுடைய இறைமைக்கும் பாதுகாப்பிற்கும் அச்சுறுத்தலாக அமையும் என்ற நிலைப்பாடு இருக்கின்றது.

ஆகவே இந்தியாவிற்கு அண்மையில் காணப்படுவது வடக்குப் பிரதேசம். மன்னாரை இந்தியா தன்னுடைய கால்பதிக்கும் தளமாக மாற்றினால் புத்தளத்தில் காலூன்றியிருக்கின்ற சீனர்களுக்கு ஒரு எதிர்வினையை கொடுக்கமுடியும் என்பது இந்தியாவின் நிலைப்பாடு.

இந்த அடிப்படையில் தான் மன்னார் மாவட்டம் தொடர்ச்சியாக கண்காணிப்பிற்கு உள்ளாக்கப்படுகின்ற இடமாக காணப்படுகின்றது.

இது தொடர்பான மேலும் பல விடயங்களை ஐபிசி தமிழின் சமகாலம் நிகழ்ச்சியில் காண்க….

நல்லூர் கந்தசுவாமி கோவில் தங்க மயில் தங்க அன்ன வாகன உற்சவம்

https://www.youtube.com/embed/7p_9GbvMxaw

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.