இந்திய(india) படையினர் சென்ற வாகனம் மீது நக்சல்கள் நடத்திய கண்ணிவெடி தாக்குதலில் 9 பேர் பலியாகினர்.சத்தீஸ்கர் மாநிலம் பீஜப்பூர் மாவட்டத்தில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.
முதற்கட்ட தகவலின்படி, இந்திய படையினர் கூட்டு நடவடிக்கை ரோந்து சென்றுவிட்டு வரும் போது சத்தீஸ்கர் மாநிலம் பீஜப்பூர் மாவட்டத்தில் உள்ள வனப்பகுதியான குத்ருவில் வரும்போது கண்ணிவெடி மூலம் நக்சல்களால் பாதுகாப்பு படையினர் வாகனம் தகர்க்கப்பட்டதாக தெரியவந்துள்ளது.
இந்த வருடம் நடத்தப்பட்ட முதல் தாக்குதல்
பஸ்தார் மண்டல படை அதிகாரி சுந்தர்ராஜ் சம்பவம் தொடர்பில் கூறியதாவது,
குத்ரு பெத்ரே சாலையில் வெடிகுண்டு பயன்படுத்தி மாவோயிஸ்டுகள் காவல்துறை வாகனத்தை வெடிக்கச் செய்தனர்.
இந்த ஆண்டின் முதல் நக்சல் எதிர்ப்பு நடவடிக்கையை சனிக்கிழமையன்று அபுஜ்மத் நகரில் நடத்திவிட்டுத் திரும்பும் போது இந்த சம்பவம் நடந்திருக்கிறது.
ஜனவரி 3ம் திகதி (வெள்ளிக்கிழமை) இந்நடவடிக்கை தொடங்கியது. தாக்குதல் நடத்திய மாவோயிஸ்டுகளை தேடும்பணி முழுவீச்சில் நடப்பதாக அவர் தெரிவித்தார்.