புத்தளம் மாரவில மரத பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் பெண் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அந்த பெண் வீட்டின் முன்பாக நின்றபோது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
துப்பாக்கிச் சூடு நடந்த போது அருகில் இருந்த 10 வயது சிறுவனும் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

