அமெரிக்க இராணுவத்தின் வெடிபொருள் ஆலையில் ஏற்பட்ட விபத்தில் பலர் உயிரிழந்துள்ளனர்.
குறித்த வெடிப்பு சம்பவம் இன்று(11.10.2025) காலை 7.45 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
இந்த வெடிப்பு சம்பவத்தில் பலர் உயிரிழந்திருப்பதுடன் பலர் காணாமல் போயுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காயமடைந்தவர்களை மீட்பதில் சிரமம்
பக்ஸ்நொர்ட்(Bucksnort) என்ற நகரத்திற்கு அருகில் உள்ள Accurate Energetic Systems-AES என்ற வெடிபொருள் உற்பத்தி ஆலையிலேயே இந்த வெடிப்பு நடந்துள்ளது.
மேலும், தொடர்ந்து வெடிப்புகள் ஏற்படுவதால் இராணுவத்தினர் அங்கிருந்து விலகி இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
இதனால், காயமடைந்தவர்களை மீட்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.