மத்தளை ராஜபக்ச சர்வதேச விமான நிலையத்தின் நிர்வாகத்தை தனியார் நிறுவனத்திடம் ஒப்படைப்பதற்கு அமைச்சரவையின் அங்கீகாரம் கிடைக்கப்பெற்றுள்ளது.
இதன்படி, இந்த விமான நிலையத்தின் நிர்வாகம் இந்தியாவின் ஷௌரியா ஏரோநாட்டிக்ஸ் பிரைவட் லிமிடட் (Shaurya Aeronautics Pvt. Ltd) நிறுவனத்திடமும் ரஷ்யாவின் ஏர்போர்ட்ஸ் ஆஃப் ரீஜன்ஸ் மெனேஜ்மன்ட் (Airports of Regions Management Company) நிறுவனத்திடமும் ஒப்படைக்கப்படவுள்ளது.
சகோதரனின் இழிவான செயல்: யாழ்.நீதிமன்றின் உத்தரவு
30வருட காலத்திற்கு அனுமதி
30வருட காலத்திற்கு ரஷ்யா, இந்தியா கூட்டு முயற்சிக்கு ஒப்படைப்பதற்கு அமைச்சரவை தீர்மானித்துள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார்.
முன்னதாக, கடந்த ஆண்டு ஜனவரி 09ஆம் திகதி நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின் போது, மத்தளை விமான நிலையத்தை வாங்குவதற்காக, விருப்பம் தெரிவிப்பு கடிதங்களை அனுப்ப நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது.
மட்டக்களப்பில் யுத்த காலத்தின்போது நிறுத்தப்பட்டிருந்த பேருந்து சேவை மீண்டும் ஆரம்பம்
இந்திய,ரஷ்யா நிறுவனங்களிடம் ஒப்படைப்பு
அதனையடுத்து, 5 நிறுவனங்கள் மத்தளை விமான நிலையத்தை வாங்குவதற்கான ஆர்வத்தை வெளிப்படுத்தியுள்ளன.
அதற்கமைய, மேற்குறிப்பிட்ட இரு நிறுவனங்களுக்கு விமான நிலையத்தின் நிர்வாகத்தை கையளிக்க அமைச்சரவை தீர்மானித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
தமிழீழ விடுதலை புலிகளை வைத்து ஆட்சியை கைப்பற்றிய சிங்கள அரசியல்வாதிகள்
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…! |