இந்தியாவின்(india) உத்தரபிரதேச மாநிலம்(uttar pradesh) ஜான்சியில் பிரேதப் பரிசோதனை கூடத்திற்கு வெளியே சடலமொன்றின் கால்களை பிடித்து இருவர் இழுத்து செல்லும் காணொளி சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அவசர நோயாளர் வண்டியின் இயக்குநர்கள் என்று கூறப்படும் இருவர் சடலத்தின் கால்களில் துணியால் கட்டிக்கொண்டு பிரேதப் பரிசோதனை கூடத்திற்குள் சடலத்தை இழுத்துச் செல்கிறார்கள்
சம்பவம் எப்போது நடந்தது
இந்த சம்பவம் எப்போது நடந்தது என்று தெளிவாக தெரியவில்லை.
இந்த காணொளி தொடர்பாக காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.