அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் மனைவி மெலனியா ட்ரம்ப், ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினுக்கு தனிப்பட்ட கடிதமொன்றை அனுப்பியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
புடினின் அலாஸ்கா பயணத்தின் போது அமெரிக்கா ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் இந்த கடிதத்தை புடினுக்கு கொடுத்தாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரஷ்யாவால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள பகுதிகளுக்கு
குறித்த கடிதத்தில் உக்ரைன் மற்றும் ரஷ்யாவில் உள்ள குழந்தைகளின் அவலநிலை குறித்த உண்மைகளை அவர் முன்வைத்தாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.
Melania Trump sends letter to Putin about abducted children https://t.co/2eWeCm5pzR pic.twitter.com/0NUusdRBd0
— New York Post (@nypost) August 16, 2025
ரஷ்யா அல்லது ரஷ்யாவால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள பகுதிகளுக்கு பல்லாயிரக்கணக்கான குழந்தைகளை அவர்களது குடும்பங்கள் அல்லது பாதுகாவலர்களின் அனுமதியின்றி மாற்றுவது ஐக்கிய நாடுகளில் இனப்படுகொலை ஒப்பந்தத்தின்படி போர்க் குற்றமாகும்.
எனவே ரஷ்யா, மாஸ்கோவில் பாதிக்கப்படக்கூடிய குழந்தைகளை போர் தாக்கங்களிலிருந்து பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.