பரீட்சை வினாத்தாள் வெளியாகியமை காரணமாக ஒத்திவைக்கப்பட்ட வடமத்திய மாகாண சாதாரண தர தவணைப் பரீட்சையை மீண்டும் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
அதன்படி குறித்த பரீட்ச்சை நாளை முதல் 16 ஆம் திகதி வரை மீண்டும் நடத்தப்படவுள்ளது.
பரீட்சைக்கான வினாத்தாள்
பௌத்தம் மற்றும் தமிழ் மொழி தவிர அனைத்து பாடங்களும் நாளை முதல் 16 ஆம் திகதி வரை நடைபெறும் என்று வடமத்திய மாகாண கல்விச் செயலாளர் சமன் குமார தெரிவித்துள்ளார்.

மேலும், இந்த தவணைப் பரீட்சைக்கான வினாத்தாள்கள் வடமத்திய மாகாணத்தில் உள்ள கோட்டக் கல்வி அலுவலகங்களில் வைக்கப்பட்டு, பரீட்சை நாளன்று சம்பந்தப்பட்ட அதிபர்களிடம் ஒப்படைக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், சம்பந்தப்பட்ட கோட்டக் கல்வி அலுவலகங்களுக்கு விசேட பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக வடமத்திய மாகாண கல்விச் செயலாளர் சமன் குமார தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

