கிளிநொச்சி – அக்கராயன்குளம் பொலிஸ் பிரிவுக்குற்பட்ட யூனியன் குளம் பகுதியில் காணாமல் போன 27வயதான இளைஞன் தூக்கிட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
வெளிநாடு செல்வதற்கு ஐந்து நாட்கள் இருந்த நிலையில் காணாமல் போனதாக தெரிவிக்கப்படுகின்றது.
பொலிஸ் விசாரணை
இந்நிலையிலேயே, 27வயதான குறித்த இளைஞன் வீட்டிலிருந்து ஒன்றரை கிலோமீற்றர் தூரத்திலுள்ள காட்டில் தொங்கிய
நிலையில் பழுதடைந்த சடலமாக நேற்று மீட்கப்பட்டுள்ளார்.

அதனை தொடர்ந்து, இச்சம்பவம் தொடர்பாக அக்கராயன் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு
வருகின்றனர்.

