முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

பிறந்தநாளில் சர்வதேச கிரிக்கெட்டில் இலங்கையில் சாதித்த ஆஸி வீரர்

தனது பிறந்த நாளான இன்று (30)சர்வதேச கிரிக்கெட்டில் அவுஸ்திரேலிய (australia)வேகப் பந்துவீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் (mitchell starc)புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளார்.

அவுஸ்திரேலியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி காலியில் நேற்று (ஜனவரி 29) தொடங்கியது. இந்தப் போட்டியில் முதலில் விளையாடிய அவுஸ்திரேலிய அணி அதன் முதல் இன்னிங்ஸில் 654ஓட்டங்கள் குவித்து ஆட்டத்தை இடைநிறுத்தியது

இதனையடுத்து, முதல் இன்னிங்ஸில் விளையாடி வரும் இலங்கை அணி இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவான இன்று 44 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது.

700 விக்கெட்டுகள்

இலங்கைக்கு எதிரான இந்த டெஸ்ட் போட்டியின்போது, அவுஸ்ரேலிய வேகப் பந்துவீச்சாளர் மிட்செல் ஸ்டார்க், அவரது 700-வது சர்வதேச விக்கெட்டினை வீழ்த்தி சாதனை படைத்தார். குறிப்பாக, அவரது பிறந்த நாளில் (35-வது பிறந்த நாள்) இந்த சாதனையைப் படைத்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.

பிறந்தநாளில் சர்வதேச கிரிக்கெட்டில் இலங்கையில் சாதித்த ஆஸி வீரர் | Mitchell Starc New Record In International Cricket

இலங்கை அணியின் திமுத் கருணாரத்னாவை ஆட்டமிழக்கச் செய்ததன் மூலம், அவர் இந்த சாதனையைப் படைத்தார்.

 மூன்றாவது அவுஸ்திரேலிய வேகப் பந்துவீச்சாளர் 

சர்வதேச கிரிக்கெட்டில் 700 விக்கெட்டுகள் வீழ்த்திய மூன்றாவது அவுஸ்திரேலிய வேகப் பந்துவீச்சாளர் என்ற பெருமை மிட்செல் ஸ்டார்க்கையே சேரும்.

பிறந்தநாளில் சர்வதேச கிரிக்கெட்டில் இலங்கையில் சாதித்த ஆஸி வீரர் | Mitchell Starc New Record In International Cricket

அவுஸ்திரேலிய அணிக்காக மிட்செல் ஸ்டார்க் டெஸ்ட் போட்டிகளில் 377 விக்கெட்டுகள், ஒருநாள் போட்டிகளில் 244 விக்கெட்டுகள் மற்றும் ரி 20 போட்டிகளில் 79 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அவருக்கு முன்னதாக, அவுஸ்திரேலிய அணியின் வேகப் பந்துவீச்சாளர்களான கிளென் மெக்ராத் மற்றும் பிரெட் லீ இருவரும் சர்வதேச கிரிக்கெட்டில் 700 விக்கெட்டுகளுக்கும் அதிகமாக வீழ்த்தியுள்ளனர்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்