ரஷ்யா(Russia) சென்றுள்ள இந்திய பிரதமர் நரேந்திர மோடி(Narendra Modi) ரஷ்யாவின் உயரிய சிவிலியன் விருது வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டுள்ளார்.
இந்தியா(India)-ரஷ்யா இடையிலான 22வது உச்சி மாநாட்டில் பங்கேற்க 2 நாள் அரசு முறைப்பயணமாக நரேந்திர மோடி நேற்று (08) ரஷ்யா சென்றுள்ளார்.
இந்திய பிரதமர் நரேந்திர மோடி தனது ரஷ்யா பயணத்தின் போது சிறப்பு மரியாதையை பெற்றதோடு ரஷ்யாவின் உயரிய சிவிலியன் விருதான ‘The Order of Saint Andrew the Apostle’ விருதையும் பெற்றுள்ளார்.
இந்தியர்களுக்கு சமர்ப்பணம்
விருது வழங்கிய புடின்(Vladimir Putin) ரஷ்யாவிற்கும் இந்தியாவிற்கும் இடையிலான இருதரப்பு உறவுகளை விரிவுபடுத்துவதற்கும் வலுப்படுத்துவதற்கும் மோடியின் பங்களிப்பை அங்கீகரிக்கும் வகையில் அவருக்கு மிக உயர்ந்த விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
ரஷ்ய அரசாங்கத்தால் தி ஆர்டர் ஆஃப் செயின்ட் ஆண்ட்ரூ தி அப்போஸ்தலர் விருது வழங்கப்படுவதை ஒரு கௌரவமாக கருதுவதாக மோடி குறிப்பிட்டுள்ளார்.
மேலும், ரஷ்ய அரசாங்கத்திற்கு நன்றி தெரிவித்ததுடன் விருதை 140 கோடி இந்தியர்களுக்கு அர்ப்பணிப்பதாக சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளார்.
அத்துடன் இந்த பயணத்தின் போது புடினுடன் மோடி பேச்சுவார்த்தை நடத்தியதாகவும், இந்த பேச்சுவார்த்தை பயனுள்ளதாக இருந்ததாகவும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
#WATCH | Russian President Vladimir Putin confers Russia’s highest civilian honour, Order of St Andrew the Apostle on Prime Minister Narendra Modi. pic.twitter.com/aBBJ2QAINF
— ANI (@ANI) July 9, 2024
Honoured to receive the The Order of Saint Andrew the Apostle. I thank the Russian Government for conferring the award.
This award is dedicated to my fellow 140 crore Indians. pic.twitter.com/hOHGDMSGC6
— Narendra Modi (@narendramodi) July 9, 2024