தமிழக தலைவர்களிடமிருந்து பல கடிதங்களைப் பெற்றாலும், அவர்களில் எவரும் தமிழில் கையெழுத்திடுவதில்லை என்று இந்திய பிரதமர் நரேந்திர மோடி (Narendra Modi) தெரிவித்துள்ளார்.
அத்துடன் அவர்கள் தங்கள் மொழியைப் பற்றி உண்மையிலேயே பெருமைப்படுவார்கள் என்றால், குறைந்தபட்சம் தமிழில் கையெழுத்திட வேண்டும் என்றும் அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.
நேற்று (06) இடம்பெற்ற பாம்பன் பாலத்தை திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
தமிழில் கையெழுத்து
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், “தமிழ் மொழி மற்றும் தமிழ் பாரம்பரியம் உலகின் ஒவ்வொரு மூலையையும் சென்றடைவதை உறுதி செய்வதற்காக அரசாங்கம் தொடர்ந்து செயற்பட்டு வருகிறது.
சில நேரங்களில், தமிழ்நாட்டின் சில தலைவர்களிடமிருந்து கடிதங்களைப் பெறும்போது நான் ஆச்சரியப்படுகிறேன். அவர்களில் யாரும் தமிழில் கையெழுத்திடுவதில்லை.
நாம் தமிழைப் பற்றி பெருமைப்படுகிறோம் என்றால், அனைவரும் குறைந்தபட்சம் தமிழில் கையெழுத்திட வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன்.“ என தெரிவித்தார்.