இந்தியாவின் கஷ்மீரிலுள்ள Pahalgam என்ற சுற்றுலாத் தளத்தில் Lashkar-e-Taiba மேற்கொண்ட பயங்கரவாதத் தாக்குதலுக்கு இந்திய அரசு கடுமையான பதில் தாக்குதலை மேற்கொள்ளப் போவதாகத் தெரியவருகின்றது.
இந்தியாவின் பதில் தாக்குதல் எதிரிக்கு மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியதாக இருக்க வேண்டும் என்பதில் இந்தியாவின் அரசியல் மற்றும் இராணுவத் தலைமைகள் உறுதியாக இருப்பதாகவும் தெரியவருகின்றது.
தாக்குதல் பற்றி இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி கூறுகின்ற போது, ‘எதிரிகளால் கற்பனை செய்ய முடியாத அளவுக்கு இந்தியாவின் பதில் தாக்குதல் இருக்கும்’ என்று எச்சரிக்கை விடுத்திருந்தார்.
பிகாரில் வைத்து அவர் விடுத்திருந்த எச்சரிக்கையின் வார்த்தைகளை ஆராய்ந்து பார்க்கின்ற போது, இந்தியாவின் பதிலடி என்பது வெறுமனே Lashkar-e-Taiba என்ற அமைப்பைக் கடந்து- இந்தியா பாக்கிஸ்தானை நேரடியாகக் குறிவைக்கின்றது என்பது தெளிவாகத் தெரிகின்றது.
இந்த விடயம் பற்றி ஆராய்கின்றது இந்த ‘உண்மையின் தரிசனம்’ ஒளியாவனம்:
https://www.youtube.com/embed/j4YPHAEjxIw?start=6