கல்வி சீர்திருத்தம் என்ற பெயரில் 3100 பாடசாலைகளை மூடுவதற்குத் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம்
முயற்சிப்பதாக மக்கள் போராட்ட முன்னணியின் நிறைவேற்றுக்குழு உறுப்பினர் துமிந்த நாகமுவ குற்றஞ்சாட்டியுள்ளார்.
தற்போதைய ஜனாதிபதி படித்த தம்புத்தேகம பாடசாலையும் இதன் கீழ் மூடப்பட உள்ளதாக தமது கட்சிக்குத் தகவல் கிடைத்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், கடந்த காலம் முழுவதும் இந்த நாட்டின் அரசாங்கங்கள் உலக வங்கி (World bank) மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் தேவைகளுக்கு ஏற்ப இந்த நாட்டில்
கல்வியைச் சீர்திருத்தத் தயாராகி வருவதை நாங்கள் அறிவோம்.
குறைந்த எண்ணிக்கை
நாடாளுமன்றத்தில் தனது உரையில் அனுர குமார திசாநாயக்க இலங்கையில்
குறைந்த எண்ணிக்கையிலான பிள்ளைகளைக் கொண்ட பாடசாலைகள் குறித்து மிகுந்த உணர்ச்சியுடன் பேசினார்.
100 இற்கும் குறைவான பிள்ளைகளைக் கொண்ட 3141 பாடசாலைகள் இருப்பதாக அவர் கூறினார்.
சில பாடசாலைகளை மூடவும் சில பாடசாலைகளை இணைக்கவும் தேவையான இடங்களில் புதிய பாடசாலைகளை நிறுவவும் அவர்
கள் தயாராக உள்ளனர்.
முதல் பார்வையில், இந்த அறிக்கையின் ஆபத்தை யாரும் புரிந்து கொள்ளவில்லை.
கருணாசேன கொடிதுவக்கு முன்னர் நாடாளுமன்றத்தில் அநுர திசாநாயக்கவின் உரையைப் போன்ற ஒரு உரையை நிகழ்த்தியுள்ளார்.
பாடசாலை பாதுகாப்பு இயக்கம்
இலங்கை யில் 3000 பாடசாலைகளை மூடுவதற்கான திட்டத்தை முதன் முதலில் கொண்டு வந்தவர் அவர்தான்.
அந்த நேரத்தில் மக்கள் விடுதலை முன்னணியும் அந்தத் திட்டத்திற்கு எதிராகப் போராடியது.
அப்போது பாடசாலைகளை பாதுகாப்பதற்காக பாடசாலை பாதுகாப்பு இயக்கம் உருவாக்கப்பட்டது.
அவர்கள் அனைவரும் இப்போது பாடசாலைகளை மூடுவதற்கான
உலக வங்கியின் திட்டத்தைச் செயல்படுத்த தயாராகி வருகின்றனர் என துமிந்த நாகமுவ தெரிவித்துள்ளார்.