முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

மாணவர்களுக்கு கிடைக்கவுள்ள சலுகை: கல்வி அமைச்சின் அறிவிப்பு

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி (Suraksha Insurance) திட்டத்தின் புதிய சலுகைகளைக் கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

நீண்டகால நோய்களால் பாதிக்கப்பட்ட மாணவர்கள் உள்ளிட்ட பல மாணவர்கள் இந்த திட்டத்தின் மூலம் பயனடைய உள்ளனர்.

புதிய சலுகைகள் செப்டம்பர் 1, 2025 முதல் நடைமுறையாகும் வகையில் இலங்கை காப்புறுதி கூட்டுத்தாபனத்துடன் இணைந்து செயற்படுத்தப்பட்டுள்ளது.

கடுமையான நோய்களுக்கான காப்புறுதி

புதுப்பிக்கப்பட்ட திட்டத்தின் கீழ், உள்நோயாளிகளுக்கான சலுகை (அரச/தனியார் மருத்துவமனை) ரூ.300,000 ஆகவும், வெளிநோயாளிகளுக்கான சிகிச்சை ரூ.20,000 ஆகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது,

மாணவர்களுக்கு கிடைக்கவுள்ள சலுகை: கல்வி அமைச்சின் அறிவிப்பு | Moe Special Insurance Payments For School Students

அதே நேரத்தில் கடுமையான நோய்களுக்கான காப்புறுதி இப்போது ரூ.1.5 மில்லியனில் இருந்து ஆரம்பமாவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விபத்து காப்புறுதியில் இப்போது நிரந்தர ஊனத்திற்கு ரூ.200,000, நிரந்தரப் பகுதி ஊனத்திற்கு ரூ.150,000 மற்றும் தற்காலிக ஊனத்திற்கு ரூ.100,000 வரை அடங்கும்.

ஆண்டுதோறும் ரூ.240,000 க்கும் குறைவாக (ரூ.180,000 இலிருந்து) வருமானம் ஈட்டும் குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கான ஆயுள் காப்புறுதி சலுகைகளும் விரிவுபடுத்தப்பட்டுள்ளன.

வெளிநோயாளர் சலுகை

அஸ்வெசும திட்டத்தின் கீழ் தகுதியுள்ள குடும்பங்கள் இறந்த பெற்றோர் அல்லது பாதுகாவலருக்கு ரூ.75,000 பெறுவார்கள், அதிகபட்சமாக ஒரு குடும்பத்திற்கு ரூ.225,000 கிடைக்கும்.

மாணவர்களுக்கு கிடைக்கவுள்ள சலுகை: கல்வி அமைச்சின் அறிவிப்பு | Moe Special Insurance Payments For School Students

கால்-கை வலிப்பு (Epilepsy), சிறுநீரகச் சிதைவு நோய்க்குறி (Nephrotic syndrome), முடக்கு வாதம் (Rheumatoid arthritis), பெருங்குடல் அழற்சி (Systemic lupus erythematosis), குடல் அழற்சி (Ulcreative colitis), நாள்பட்ட நோய் (Crohn discase) மற்றும் இதய வாத நோய் (Rheumatic valvular heart disease) போன்ற நீண்டகால நோய்களால் பாதிக்கப்பட்ட மாணவர்கள் இப்போது வெளிநோயாளர் சலுகைகளுக்குத் தகுதியுடையவர்கள்.

மேலதிகக் காப்புறுதியில் முதுகுத்தண்டு வளைவு ரூ.75,000 மற்றும் காது, மூக்கு, தொண்டை நிபுணர்களால் பரிந்துரைக்கப்படும் செவிப்புலன் கருவிகளுக்கு ரூ.75,000 ஆகியவை அடங்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.