முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

சீதை அம்மன் ஆலயத்தில் இரண்டாவது தடவையாகவும் உண்டியல் திருட்டு!

நுவரெலியா, சீதாஎலிய சீதையம்மன் ஆலயத்தில் நேற்று இரவு (01.11.2025) இனந்தெரியாத நபர்களால் வைக்கப்பட்டிருந்த 7 உண்டியல்கள் திருடப்பட்டுள்ளதாக ஆலய நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.

நுவரெலியா சீதாஎலிய சீதையம்மன் ஆலயத்தில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.ரிவி கமராக்கள் உடைக்கப்பட்டு ஆலயத்தின் காரியாலயத்தில் வைக்கப்பட்டிருந்த பணம் மற்றும் ஆலயத்தின் உட் பகுதியில் பல்வேறு தேவைகள் நிமித்தமாக வைக்கப்பட்டிருந்த ஏழு உண்டியல்களே இவ்வாறு திருடப்பட்டுள்ளன.

இனம் தெரியாத நபர்கள் ஆலயத்திற்குள் பிரவேசித்து குறித்த உண்டியல்களை உடைத்து அதிலிருந்த பணத்தாள்களை திருடிவிட்டு சில்லறைகளை ஆற்றில் கொட்டிவிட்டு சென்றுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரு தடவைகள்

இதேவேளை, ஆலயத்தின் காரியாலயத்தில் வைக்கப்பட்டிருந்த பற்றுச்சீட்டு பணம் சுமார் 53000 ரூபாவும் இதன்போது திருடப்பட்டுள்ளது.

சீதை அம்மன் ஆலயத்தில் இரண்டாவது தடவையாகவும் உண்டியல் திருட்டு! | Money Theft At Sita Amman Temple

உண்டியல் பணம் உட்பட நான்கு இலட்சம் ரூபாய் வரை திருடப்பட்டிருக்கலாம் என நிர்வாக சபையினர் தெரிவிக்கின்றனர்.

இவ்விடயம் தொடர்பாக நுவரெலியா காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டதை தொடர்ந்து காவல் துறையினர் ஆலயத்திற்கு வருகை தந்து மேலதிக விசாரணைகளையும் ஆரம்பித்துள்ளனர்.

திருடர்கள் ஆலயத்தின் ஆற்றங்கரை வழியாக வருகை தந்து வெளியில் பொருத்தப்பட்டிருந்த கமராவை உடைத்ததன் பின்பு ஆலயத்திற்கள் உட்பிரவேசித்து இந்த திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டள்ளனர்.

இவ்வாண்டின் இரண்டாவது தடவையாக இவ்வாறு குறித்த ஆலயத்தில் திருட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளதாக ஆலய நிர்வாகத்தினர் தெரிவிக்கின்றனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை நுவரெலியா காவல்துறையினர் மேற்கொண்டு வருவதுடன் ஆலயத்தின் பாதுகாப்பை பலப்படுத்துவதற்கு தேவையான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படும் எனவும் ஆலய நிர்வாக சபையினர் தெரவிக்கின்றனர்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.