வவுனியா (Vavuniya) – மகாறம்பைக்குளம் பகுதியில் விற்பனைக்காக சட்டவிரோதமாக வெட்டப்பட்ட 20 இலட்சத்திற்கும் மேல் பெறுமதியான மரங்கள் மீட்கப்பட்டதுடன்
ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த கைது நடவடிக்கையானது, இன்று (20.06.2024) வவுனியா மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினரால் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதன்போது, வவுனியா பிரதி பொலிஸ் மா அதிபருக்கு கிடைக்கப்பெற்ற
இரகசிய தகவலின் அடிப்படையில், மரங்கள் மீட்கப்பட்டுள்ளன.
மேலதிக விசாரணைகள்
மேலும், சட்டவிரோதமாக இவ்வாறு மரங்கள் வெட்டிய சம்பவத்துடன் தொடர்புடைய 30 வயதுடைய சந்தேக நபரையும் பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.
இந்நிலையில், மீட்கப்பட்ட மரங்கள் சுமார் 20 இலட்சம் ரூபாவிற்கும் மேல் பெறுமதியானது என
பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அதேவேளை, மீட்கப்பட்ட மரங்களும் சந்தேக நபரும் வவுனியா பொலிஸாரிடம்
ஒப்படைக்கப்பட்டு மேலதிக விசாரணைகளின் பின்னர் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த
நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் குற்றத்தடுப்பு பிரிவினர் கூறியுள்ளனர்.
மேலும், குறித்த கைது நடவடிக்கையில், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் மாலின் அஜந்த பெரேராவின் உத்தரவின் பேரில், மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவின் பொறுப்பதிகாரி சிரேஷ்ட பொலிஸ் பரிசோதர் அழகியவண்ண உள்ளிட்ட குழுவினர் ஈடுபட்டிருந்தனர்.