கர்நாடகாவில் (Karnataka) பெண்ணொருவர் தமது குழந்தையை வெந்நீரில் இட்டுக் கொலை செய்த சம்பவம் ஒன்று அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குழந்தை பால் குடிக்க மறுத்தமையினால் குறித்த பெண் இவ்வாறு நடந்து கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
பிரசவத்துக்குப் பின்னரான மனம் அழுத்தம் காரணமாக அவர் பாதிக்கப்பட்டு இருக்கலாம் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
மனம் அழுத்தம்
கர்நாடக மாநிலம் பெங்களூரில் அருகே உள்ள நெலமங்கலாவை சேர்ந்த 27 வயது பெண் ஒருவர் தனது பச்சிளம் குழந்தையைக் கொதிக்கும் நீரில் இட்டுள்ளார்.
இந்நிலையில் தீக்காயங்களக்குள்ளான குழந்தை சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் பரிதாபமாக உயிரிழந்ததாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.