சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் (Chennai Super Kings) இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 17 மில்லியன் பின் தொடர்பவர்களை பெற்ற முதல் அணி என்ற சாதனையை படைத்துள்ளது.
சென்னைக்கு அடுத்தபடியாக 16.3 மில்லியன் பின் தொடர்பவர்களுடன் ஆர்.சி.பி (Royal Challengers Bengaluru) அணி இரண்டாவது இடத்திலும், 15.4மில்லியன் பின் தொடர்பவர்களுடன் மும்பை இந்தியன்ஸ் மூன்றாவது இடத்திலும் உள்ளது.
2025 ஐபிஎல் தொடர் இந்த மாதம் மார்ச் 22 ஆம் திகதி முதல் மே 25ஆம் திகதி வரை நடைபெற உள்ளது.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி
எக்ஸ் பக்கத்தில் 10 மில்லியன் பின்தொடர்பவர்களை கடந்த ஒரே அணி என்ற சாதனையையும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தன்வசம் வைத்துள்ளது.
View this post on Instagram
எம்.எஸ் டோனி (MS Dhoni) என்ற பெயர் தான் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் இன்ஸ்டாகிராமில் அதிக பேர் பின்தொடர்பவதற்கு முக்கிய காரணம்.
இந்நிலையில், 2024 ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே கேப்டன் பதவியில் இருந்து தோனி விலகி இருந்தார்.
எதிர்வரும் ஐபிஎல் தொடரில் ருதுராஜ் தலைமையில் சென்னை அணி களமிறங்கவுள்ளது.