தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையில் முல்லைத்தீவு (Mullaitivu) மாவட்டத்தில் விசுவமடு
விஸ்வநாதர் ஆரம்ப பாடசாலை மாணவன் 186 புள்ளிகளைப் பெற்று மாகாண மட்டத்தில்
முதலிடம் பெற்றுள்ளார்.
2024 ஆம் ஆண்டு இடம்பெற்ற தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சைப் பெறுபேறு கடந்த 23ஆம்
திகதி மாலை வெளியாகியது.
அதன் அடிப்படையில் கிசோதரன்
அக்ஷயன் 186 புள்ளிகளைப் பெற்று மாகாண ரீதியில் சாதனை புரிந்துள்ளார்.
மாணவனை கௌரவிக்கும் நிகழ்வு
இந்நிலையில், மாணவனை கௌரவிக்கும் நிகழ்வு விஸ்வநாதர் ஆரம்ப
பாடசாலையில் அதிபர், ஆசிரியர்கள் இணைந்து மேற்கொண்டனர்.
மேலும், குறித்த பாடசாலையில் 14
மாணவர்கள் வெட்டுப்புள்ளிகளுக்கு மேல் பெற்றுள்ளமையும் குறிப்பிடதக்கது.