2025 ஆம் ஆண்டில் மட்டும் சுமார் 1947
ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொதுப் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால
தெரிவித்துள்ளார்.
இன்று(23) இடம் பெற்ற நாடாளுமன்ற அமர்விலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
போதைப்பொருள் மற்றும் பாதாள உலக வலையமைப்புகளின் முக்கிய பகுதியாக ஆயுதங்கள்
இருப்பதாக, அமைச்சர் கூறினார்.
துப்பாக்கிச் சூடு
மேலும் சில பாதாள உலகக் கும்பல்கள் இன்னும் ஆயுதங்களை வைத்திருப்பதால், நாடு
முழுவதும் துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் பதிவாகி வருவதாகவும் அவர் இதன் போது
தெரிவித்தார்.

முன்னர் ஒரு இராணுவ முகாமில் இருந்து 78, T-56 துப்பாக்கிகள் பாதாள உலகக்
கும்பல்களுக்கு வழங்கப்பட்டதாகவும், அவற்றில் 36 துப்பாக்கிகள் ஏற்கனவே
அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டதாகவும் அமைச்சர் விஜேபால கூறினார்.
எனினும், அரசாங்கம் நாட்டில் பாதாள உலகத்தையும் போதைப்பொருள்
அச்சுறுத்தலையும் ஒழிக்கும் என்று குறிப்பிட்ட அவர், இதற்காக ஒரு முறையான
திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

