கிராண்ட்பாஸ் – ஜபோஸ்லேன் பிரதேசத்தில் கூரிய ஆயுதத்தால் தாக்கிச் சகோதரர்கள் இருவர் கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய இரண்டு சந்தேக நபர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
அவர்களைக் கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தனிப்பட்ட குரோதம்
நேற்று அதிகாலை இடம்பெற்ற இரட்டை கொலை சம்பவத்தின் போது 21 மற்றும் 22 வயதுகளைக் கொண்ட பாலத்துறை – நவலோகபுர பகுதியைச் சேர்ந்த சகோதரர்கள் உயிரிழந்தனர்.
இரண்டு குழுக்களுக்கு இடையே ஏற்பட்ட தனிப்பட்ட குரோதம் நீடித்தமையே மோதலுக்கான காரணம் என பொலிஸ் தெரிவித்துள்ளது.