முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

முத்துநகரில் கைது செய்யப்பட்ட விவசாயிகள்: நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு

திருகோணமலை- முத்து நகர் பகுதியில் கைது செய்யப்பட்ட ஐந்து விவசாயிகளை  விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

அதன்படி, குறித்த  ஐந்து விவசாயிகளை எதி்ர்வரும் 4ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதிமன்ற நீதவான் இன்று
(28) உத்தரவிட்டுள்ளார்.

திருகோணமலை பட்டினமும் சூழலும் பிரதேச செயல பிரிவில் உள்ள முத்துநகர் விவசாய
பகுதியில் இடம்பெற்ற கைகலப்பு சம்பவம் தொடர்பில் சீனக்குடா பொலிஸாரினால்
நேற்றைய தினம் (27) முத்துநகர் பகுதியைச் சேர்ந்த 6 பேர் சந்தேகத்தின் பேரில்
கைது செய்யப்பட்டிருந்தனர்.

விளக்கமறியல்

குறித்த சந்தேக நபர்களை இன்றையதினம் (28) நீதிமன்றில் முன்னிலைப்படுத்திய போது ஒருவருக்கு பிணை வழங்கப்பட்டதுடன் மிகுதி 5 பேரை எதிர்வரும் 4ஆம் திகதிவரை
விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

முத்துநகர் விவசாயிகள் விவசாயம் செய்து வந்த காணியில் தனியார் சூரிய மின்சக்தி
(சோலார் )நிறுவனம் ஒன்றினால் வேலைகள் இடம்பெற்றுக் கொண்டிருந்த நிலையிலேயே
குறித்த வன்முறைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

முத்துநகரில் கைது செய்யப்பட்ட விவசாயிகள்: நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு | Muthu Nagar Farmers Arrested For File A Complaint

குறித்த சம்பவம் இடம்பெற்ற
இடத்தில் இலங்கைத் துறைமுக அதிகாரசபையின் ஊழியர்கள் மற்றும் சோலார்
நிறுவத்தினுடைய ஊழியர்கள் இருந்ததாகவும் தெரிய வருகின்றது.

திருகோணமலை சீனக்குடா பொலிஸ் நிலையத்திற்கு குறித்த சம்பவம் தொடர்பில் நேற்றைய
தினம் (27) முறைப்பாடு பதிவு செய்ய சென்ற விவசாயிகள் 3 பேரும் வீட்டில் இருந்த
3 பேருமே பொலிசாரினால் இவ்வாறு கைது செய்யப்பட்டு இன்று (28) நீதிமன்றில்
முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

முத்துநகர் விவசாயிகள் விவசாய நடவடிக்கையில் ஈடுபட்டு வந்த காணிகளில் சிலர்
பெகோ வாகனங்களைக் கொண்டு அத்துமீறி நடவடிக்கைகளில் ஈடுபடுவதாக அறிந்த
விவசாயிகள் அங்கு சென்று அங்கிருந்த நபர்களுடன் வாக்குவாதத்தில்
ஈடுபட்டதாகவும் இந்நிலையில் இரு தரப்பினருக்கும் இடையே கல்வீச்சு தாக்குதல்
இடம்பெற்றதாகவும் தெரிய வருகின்றது.

விவசாயிகள் கைது

குறித்த சம்பவத்தில் காயமடைந்த விவசாயிகள் சிலர் சீனக்குடா பொலிஸ்
நிலையத்திற்கு முறைப்பாடு செய்வதற்காக மதியத்தில் இருந்து மாலை வரை
காத்திருந்தபோதும் பொலிஸார் முறைப்பாட்டை பெற்றுக் கொள்ளாமல் விவசாயிகளை கைது
செய்துள்ளதாகவும், இந்நிலையில் விவசாயி ஒருவர் காயமடைந்த நிலையில் கிண்ணியா
வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவிக்கின்றனர்.

முத்துநகரில் கைது செய்யப்பட்ட விவசாயிகள்: நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு | Muthu Nagar Farmers Arrested For File A Complaint

இதேவேளை
மற்றைய தரப்பைச் சேர்ந்த நபர் ஒருவரும் காயமடைந்த நிலையில் திருகோணமலை
வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

முத்துநகர் விவசாயிகள் நீண்டகாலமாக விவசாயம் மேற்கொண்டு வந்த காணிகளில்
இருந்து சில விவசாயிகள் அண்மையில் நீதிமன்றத்தின் மூலம்
வெளியேற்றப்பட்டிருந்தனர்.

இருப்பினும் ஏனைய காணிகளில் விவசாய நடவடிக்கையில்
ஈடுபட முடியும் என பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திரா அறிக்கை
வெளியிட்டிருந்ததாகவும் ஆனால் ஏனைய காணிகளும் இந்திய நிறுவனத்திற்கு சூரிய
சக்தி மின் திட்டத்திற்காக வழங்கப்பட்டு வேலைகள் இடம்பெற்று வருவதாகவும்
விவசாயிகள் மேலும் தெரிவிக்கின்றனர்.

குறித்த விவசாயிகள் ஜனாதிபதி செயலகம் முன்னாலும் நில அபகரிப்புக்கு எதிராக
போராட்டத்தை நடாத்தியதுடன் திருமலை மாவட்டத்திலும் நில மீட்புக்காக
போராட்டத்தில் ஈடுபட்ட போது பொலிஸாரின் தாக்குதலுக்கும் உள்ளாகினர்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.